scorecardresearch

போலி வீடியோ: பீகார் யூடியூபரை கைது செய்ய விரைந்த தமிழக போலீஸ்

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை, கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் பிகார் விரைந்துள்ளனர்.

police

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப்பை, கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் பிகார் விரைந்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்தார். மேலும் பீகார் மாநிலத்திலிருந்து வந்த குழு, உண்மையான நிலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. தமிழக ஆளுநரும், வடமாநில தொழிலாளர்கள் கவலைபட வேண்டாம். தமிழர்கள் நட்பானவர்கள் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இதுபோன்ற போலி வீடியோக்களை பரப்பியவர்களை, சைபர் கிரமை பிரிவுடன் இணைந்து தமிழக காவல்துறை கைது செய்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிட்டதட்ட திரைப்படம் போல், வடமாநிலத் தொழிலாளர்கள்  தாக்கப்படுவதை வடிவமத்து, காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மணீஷ் காஷ்யப்பை கைது செய்ய தமிழக காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அவரை கைது செய்ய தமிழக தனிப்படை காவல்துறையினர் பீகார் விரைந்துள்ளனர். இந்நிலையில்  அவரை மதுரைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக  தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Manish kashyap youtuber behind bihar workers attacked fake videos