அடுத்த சோகம் : சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் பலி
அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அபினேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அபினேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால், இன்று (நவ.3) மாலை தனது 3 வயது மகன் அபினேஷ்வரனை அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கின் முன்பகுதியில் அமர்ந்திருந்த அபினேஷ்வரனின் கழுத்தில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்திற்குள் கழுத்தை அறுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கோபால் பைக்கை நிறுத்தி விட்டு கதறி துடித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் அபினேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அபினேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட 2015-ம் ஆண்டு முதல் தடை உள்ளது. மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர். அபினேஷ்வரனின் மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூல் பட்டம் விட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news