Advertisment

மாஞ்சா நூலால் காயம் அடைந்த மூன்று வயது சிறுவன்! சென்னையில் தொடரும் பரிதாபம்

தலைமறைவாக உள்ள ஜாகிர் உசேன் மற்றும் சேகர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manja thread injured 3 year old boy in chennai

Manja thread injured 3 year old boy in chennai

Manja thread injured 3 year old boy in Chennai : சென்னை சூளைமேடு 2வது லேனில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றும் அவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். தன்னுடைய மூன்று வயது மகன் மோனிக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதற்காக அவர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். சிறுது தூரத்திற்கு அப்பால் சிலர் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் பட்டம் நூல் அறுந்து கீழே வந்து கொண்டிருந்தது.

Advertisment

சிறிது நேரத்தில் மோனியின் முகத்தில் அந்த மாஞ்சா நூல் கிழித்து, கண், புருவம், மற்றும் மூக்கின் பக்கத்தில் இருந்து ரத்தம் கொட்ட துவங்கியது. இதனை கண்ட மோனியின் தந்தை உடனே அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மணிகண்டனின் மனைவி சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையை சேர்ந்த பிரபாகரன் (29), அயனாவரம் சீனிவாசன், சூளைமேடு விக்னேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 பட்டங்கள் மற்றும் 8 மாஞ்சா நூல் உருண்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ஜாகிர் உசேன் மற்றும் சேகர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“ 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment