தேனி, மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதால், 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள மஞ்சளார், அணை தற்போது தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அணை, 395.37 மில்லியன் கன அடி நீர் நிரம்பி அதன் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டி உள்ளது.இதனால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 99 கன அடி நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அங்கு பெய்யும் கனமழையால் நீர்மட்டம் 55 அடி எட்டும் போது முன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.