சென்னை நந்தனத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசின் மக்கள் ஐ.டி. யாருக்கும் போட்டியும் இல்லை.
பொறாமையும் இல்லை. ஆதாருக்கு போட்டி என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. திட்டங்கள் சரியான பயனாளிக்கு கிடைக்க தகவல் அவசியம்.
அதற்காக குடும்ப தரவு தளம் அமைக்க திட்டமிட்டோம். அதற்கான பணிகள் நடைபெற்று, சிறப்பாக உள்ளது. இதன் மூலம் சரியான மக்களுக்கு சரியான திட்டம் கிடைக்கும்.
அப்படி ஒருவேளை கிடைக்கவில்லையென்றாலும் சரியான திட்டங்களை கிடைக்காத மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என்றார்.
மேலும், “நாங்கள் ஆதார் வேண்டாம் என்றாமோ? அல்லது ஆதாருக்கு போட்டி என்றோமா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றார்.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரின் தரவுகளையும் ஒருங்கிணைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளையும் சேமிக்க, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முடிவுசெய்து உள்ளது.
இதில் மாநில மக்களின் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். இந்த மக்கள் அடையாள அட்டை 10 முதல் 12 இலக்க எண்களை கொண்டிருக்கும். மேலும் இதுவொரு தனித்துவமான அடையாள அட்டையாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/