டெல்லியில் அதிமுக எம்.எல்.ஏ.வும், வழக்குரைஞருமான மனோஜ் பாண்டியன் கூறுகையில், “ஓ.பன்னீர் செல்வம் தொடர்ச்சியாக கூறிவருகிறார். ஒருங்கிணைந்த அதிமுக என்பதே அவரின் விருப்பம்.
நேற்றைய பேட்டியிலும் இதனை அவர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், இடைக்கால மனு மீது அளிக்கப்பட்ட இடைக்கால பொருத்தமான தீர்ப்பு இது. பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இடைக்கால தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” என்றார்.
மேலும் அதிமுகவில் பல்வேறு தரப்புகள் உள்ளனரே என்ற கேள்விக்கு, தரப்புகள் என்று யாரும் இல்லை. ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மட்டுமே உள்ளனர்” என்றார். பின்னர், எடப்பாடி பழனிசாமி போட்ட வழக்கு அவருக்கு எதிராகவே அமைந்துவிட்டது” என்றும் கூறினார்.
அ.தி.மு.க வேட்பாளரை பொதுக் குழு முடிவு செய்யட்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.7ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/