நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
லியோ திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் அதில் நடிகை த்ரிஷா தொடர்பாக தகாத கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு எதிராக நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷாவிற்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகன், சின்மயி, சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் மன்சூர் அலிகான் தவறை உணர்ந்து ஊடகத்திற்கு முன்பு மனிப்பு கேட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மன்சூர் அலிகான் மனிப்பு கேட்ட முடியாது என்று தெரிவித்தார்.
இன்று நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்படுள்ளதால் இன்று ஆஜராகவில்லை என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நாளை ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“