மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி: திருச்சியில் இருந்து தூய்மைப் பணியாளர்கள் சென்னை பயணம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவி உபகரணப் பொருட்களைக் கொண்ட திருச்சி குழுவினரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவி உபகரணப் பொருட்களைக் கொண்ட திருச்சி குழுவினரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
sdaa

மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவி உபகரணப் பொருட்களைக் கொண்ட திருச்சி குழுவினரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்தநிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கொடியசைத்து வாகனங்களை சென்னைக்கு அனுப்பியபோதுமாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சமிபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பால் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில்பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் துரித நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைந்து மீட்டெடுக்க நமது திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேரிடர் மேலாண்மை பணிகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தூய்மைப் பணியாளர்கள்-300 நபர்களும், ஊராட்சி செயலர்கள் 28 நபர்களும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் -14 நபர்களும் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னைக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உதவி உபகரண பொருட்கள் பிளீச்சிங் பவுடர் 700 மூட்டைகளும், சுண்ணாம்பு தூள் - 2100 மூட்டைகளும், மரம் அறுக்கும் இயந்திரம் 56ம், ஜெனரேட்டர் -14ம், புகை தெளிக்கும் இயந்திரம் - 56ம்,முள்கம்பிகள் -210ம், துடைப்பம்-210ம், குப்பைத் தொட்டிகள் -1710ம், டிராக்டர் 14ம், எஸ்போயர்- 28ம், பெனாயில் 350 லிட்டரும், முதலுதவி பெட்டி 56ம், முகக்கவசம் -7,000மும், டார்ச் லைட் -70ம் என இவை அனைத்தும் 14 டிராக்டர்கள் மூலம் மிக்ஜாம் புயல் பாதிக்கப்பட்ட தலைநகர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: