/tamil-ie/media/media_files/uploads/2020/07/4d9332e8ee57419f2d62facdc1a22217-17.jpg)
manushyaputhiran facebook post corona
manushyaputhiran facebook post corona : எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் என அனைவரும் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர், தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் , அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் குறிப்பாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் களத்தில் பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், காவலர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திமுக பேச்சாளரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அவரே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதோ அவரின் பதிவு,
மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா உறுதியாகி இருக்கும் தகவல் இலக்கிய உலகத்தினரிடம் பெரும் சோசத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவர் நலம் பெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.