டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 10ம் தேதி இந்தியா முழுமையிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரிமுதல் சென்னை வரையில்50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில்
டி.எஸ்.பி மகேஷ்குமார் பங்கேற்க வந்த விவசாயிகளுடைய மூன்று வேன்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மூன்று வயது கைக்குழந்தையுடன் இரவு 7 மணி வரையிலும் சிறை வைக்கப்பட்டனர்.
கைக்குழந்தையின் அழுகுரலை கேட்டு பால் கூட வாங்கிக் கொடுக்காமல் தடுத்துள்ளனர். இரவு ஏழு மணிக்கு வாகனங்களை விடுவிக்க மாட்டோம். வாகனங்களில் போராட்ட களத்திற்கு வந்தது சட்டம் விரோதம் எனக்கூறி வேன்களை வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல போகிறோம் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் நிர்வாகிகளிடம் ரூபாய் 30,000 ம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாகனங்களை விடுவித்துள்ளனர். இதனை கண்டித்தும் டிஎஸ்பி மகேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்ச் 16ஆம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், நீர் பாசன துறை அமைச்சர் வி கே சிவகுமாரும் தமிழகம் நோக்கி செல்லும் உபரி நீரையும் தடுத்து மேகதாட்டு அணை கட்டி தமிழக விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு பேசி வருகின்றனர்.
நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவக்குமார் மேகதட்டு அணை கட்டுவதற்காகவே நீர்பாசனத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றதாக சபதம் ஏற்று பேசுவது தமிழக விவசாயிகளை மிகுந்த கோபத்திற்கும் அச்சத்திற்கும் தள்ளியுள்ளது.
இந்நிலையில் இதனை தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்.
தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்காமல் கைவிட்டு விடுவார்களோ? என்று தமிழக விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும், உடன் மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் மார்ச் 15ஆம் தேதி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் திருவாரூரில் நடைபெற உள்ளது என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“