scorecardresearch

மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல்: குடும்பத் தலைவிக்கான ரூ.1000 அறிவிக்கப்படுமா?

மார்ச் 20-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மார்ச் 20 தமிழக பட்ஜெட் தாக்கல்: குடும்பத் தலைவிக்கான ரூ.1000 அறிவிக்கப்படுமா?

மார்ச் 20-ம் தேதி  தமிழக சட்டசபையில் பட்ஜெட்  தாக்கல் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம்  மார்ச் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்  வருகின்ற மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

2023- 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்பதை  அலுவல் குழு முடிவு செய்யும் என்று அப்பாவு கூறினார்.

மேலும் அதிமுக இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் 28ம் தேதி முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: March 20 tamilnadu budget says appavu

Best of Express