சென்னைக்கு சென்றால்தான் நான் இயக்குநர், மக்களின் கதறலுக்கு உதவ வேண்டும் என்பதே முதல் பணி என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் மீட்பு பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாரிசெல்வராஜ் பேசியதாவது “
” நான் இயக்குநர் இல்லை. இது என் ஊர் மற்றும் எனது மக்கள். இயக்குநராக இல்லாவிட்டாலும் கூட இப்படித்தான் அலைந்திருப்பேன்.. சினிமா பற்றி தற்போது மறந்துவிட்டது. அவர்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. சென்னைக்கு சென்றால்தான் நான் இயக்குநர்.
ஊரில் இருப்பவர்கள், உதவி கேட்கிறார்கள். அதற்குதான் இப்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எப்படியாது மீட்க வேண்டும் என்று மக்கள் கதறுகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்தேன். உதயநிதி சாரிடம் பேசினேன். அவர் உடனடியாக உதவிக்கு இங்கு வந்தார். அவர் சேலத்தில் இருந்தார். நான் போனில் அழைத்து இங்கே நிலை மோசமாக உள்ளது என்று கூறினேன். திருநெல்வேலியை பார்வையிட்ட பிறகு இங்கே வந்தார். அவரிடம் அவ்வளவு விவரங்களையும் விளக்கி சொன்னேன். உள்ளே செல்வதே பெரிய விஷயம் என்று சொன்னேன். முழுவதும் நீரால் சூழப்பட்ட பகுதி. இங்கே நீரை நம்பித்தான் மக்களே வாழ்கிறார்கள். இங்க நீர் என்பது பயம் இல்ல.
அவர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால் இவ்வளவு நீரை எதிர்பார்க்கவில்லை. அவர் வந்ததும் அதிக உதவிகள் கிடைத்தது. அவர் வரும் வரை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். அவர் வந்ததும் உடனே வேலை நடந்தது. அதிக வேலை வேகமாக நடந்தது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“