யூடியூபர் மாரிதாஸுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

போலி இமெயில் மூலம் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரை ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Maridas case, Maridas case court order, court order to take him police custody, யூடியூபர் மாரிதாஸுக்கு ஒரு நாள் போலீஸ் காவல், எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு, youtuber Maridas, tamilandu, chennai

போலி இமெயில் மூலம் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரை ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் திமுகவையும் மாநில அரசையும் தொடர்ந்து விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணம் மற்றும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் முறித்து யூடியூபர் மாரிதாஸ் சமூக வளைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதால் போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாரிதாஸை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இதனிடையே, யூடியூபர் மாரிதாஸை போலி இமெயில் மூலம் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மாரிதாஸை ஒரு நாள் போலீஸ் காவலில் இடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maridas case court order to take him police custody

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com