யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை
Maridhas house raid : மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா்.
Maridhas house raid : மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா்.
மதுரையில் யூடியூப் விமா்சகா் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
மதுரை சூா்யா நகர் பகுதியை சோ்ந்தவா் மாரிதாஸ். யூடியூப் விமா்சகரான இவா்,தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில், சென்னை சைபா் குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமாா் தலைமையில் 5 போலீஸாா், மதுரை சூா்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அங்கு மாரிதாஸிடம் விசாரணை நடத்திய போலீசார், அவருடைய கம்ப்யூட்டர், மொபைல்போன் உள்ளிட்டவைகளை சோதனை செய்தனா். சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் சோதனை நீடித்தது. அதன் பின்னா் போலீஸாா் சென்னை புறப்பட்டு சென்றனா். இந்த சோதனை குறித்தும், மாரிதாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீஸாா் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
Advertisment
Advertisements
முன்னதாக, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த வந்தபோது, சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டு போலீஸாருடன் மாரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விசாரணைக்கான உத்தரவுகளை அவரிடம் தெரிவித்த போலீஸாா் பின்னா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா். இதையடுத்து போலீஸாா் சோதனையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனா். மாரிதாஸிடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீண்டும் விசாரணை மேற்கொள்வாா்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil