பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் மாரடைப்பில் மரணமடைந்தார். காலையில் டப்பிங் முடித்து வீடு திரும்பியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் என்ற தொடரில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் ரசிகப்பட்டது. இவர் இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே சூரியாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர் கடந்த 2008 ஆண்டு “ கண்ணும் கண்ணும் “ 2014ம் ஆண்டு ’புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கிநார். இந்த 2 படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக நடிக்கத் தொடங்கினார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயலரில் இவரின் கதாபாத்திரம் பாராட்டப்பட்டது. இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“