/indian-express-tamil/media/media_files/SU9VpkNEdg3xBcARhfZR.jpg)
விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் வருகிற 6- ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான விமானப்படை தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் வருகிற 6- ஆம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக ஆளுநர், முதலமைச்சர், விமானப்படை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு ஒத்திகைகள் இன்று செவ்வாய்கிழமை முதல் 5-ம் தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்றும், இன்று பிற்பகல் 1:45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 2, 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.