மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகம் செல்வதால், காமராஜர் சாலையில், வார இறுதி நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெயில் அதிகமாக உள்ளதால், மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்வது அதிகமாகிவிட்டது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலையில் அருகே திருப்பிவிடப்பட்டு, பாரத் சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக சென்று நினைத்த இடத்திற்கு செல்லலாம்.
இதுபோல ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை – பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று நினைத்த இடத்திற்கு செல்லலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.
அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை பெல்ஸ் ரோடு வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று நினைத்த இடத்திற்கு செல்லலாம்.
பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது விக்டோரியா விடுதி சாலை ஒருவழியாக மாற்றப்படும் .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil