ஃபோர்ஷோர் எஸ்டேட் கடற்கரை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கடற்கரையில் அதிகமான மாசு நுரையைக் கண்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கையில் , கடலில் இருந்து வரும் அலைகள் அதிக நுரையாக கடற்கரைக்கு வருகின்றன. அந்த அலைகள் மீண்டும் கடலுக்கு செல்லும் போது, வெள்ளை நுரைகளும் மற்ற அழுக்கு படிமங்களும் கடற்கரையிலே தங்கை விடுகின்றன என்றனர்.
Chennai’s Marina frothing.. pic.twitter.com/ZHqqkCrO1v
— Pramod Madhav (@madhavpramod1) November 29, 2019
இந்த நுரைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதற்கு தற்போது பல்வேறு காரணங்களும் பேசப்பட்டு வருகிறது. உதாரணமாக, சுத்திகரிப்பு மையங்களில் இருந்து வெளியிடப்படும் உபரிநீர் கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக சுத்தகரிப்பு மையத்தில் அதிகமான மழைநீர் சேர்ந்து விடுவதால், முக்கால்வாசி கழிவுநீர் சுத்தம் செய்யாமல் அப்டியே கடலுக்கு செல்கின்றன்து என்ற கூறப்படுகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சோப், டிட்டர்ஜன்ட் பவுடர், விவசாயத்தில் பயன்படுத்தும் உரத்தில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஒன்றாக கடலில் கலந்து அதிகமாக அலையில் சுழலுவதால் இந்த வெள்ளை நுரை ஏற்படுவதாகவும் தெரியவருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் பெல்லாரி ஏரியும் இதே போன்று வேலை நுரையால் நிரம்பியது என்பது குறிப்பிடத்த்தக்கது.
அதிகாமாக தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளால் பெல்லாரி ஏரியில் மாசுபடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.