அட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே!

வாக்குவாதம் முற்றி கடைசியில் சந்தியா – சண்முகம் கல்யாணம்  நின்று போனது.

அதிமுக - திமுக கொடி
அதிமுக – திமுக கொடி

அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் காலையில் நடக்கவிருந்த திருமணம் நின்று போச்சு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனா நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்து அது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிமுக – திமுக கொடி பிரச்சனை:

அதிமுக என்றால் அதற்கு எதிரணி திமுக,  ரஜினிகாந்த் ஸ்டைல் என்றால், கமல்ஹாசன் நடிப்பு, விஜய் டான்ஸ் என்றால் அஜித் மாஸ் என்று   ஒவ்வொன்றுக்கு எதிர்ச்சொல்லாக மற்றொரு பொருளை அல்லது நபரை கூறுவது  ரொம்ப காலமாகவே இருந்து வரும் வழக்கம் தான்.

இதற்காக   உயிர் போகும் அளவிற்கு நின்று  வாக்குவாதம் செய்யும் நபர்களும் இருக்கிறார்கள். இதே வாக்குவாதத்தை திருமணத்தில் செய்தால் என்ன ஆகும். இதுதானே நடக்கும். அப்படி வாக்குவாதம் முற்றி கடைசியில் சந்தியா – சண்முகம் கல்யாணம்  நின்று போனது.

ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும்  அதிமுகவை சேர்ந்த  சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயப்பட்டிருந்தது.

இன்று  காலை நடைப்பெறவிருந்த அந்த திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர்.  பதிலுக்கு சண்முகம் உறவினர் அதிமுக பேனர் வைத்தனர்.

இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

கடைசியில்  சந்தியா – சண்முகம் திருமணம்  நின்று போனது.  ஆனால் பெண்ணின் வீட்டாருக்கு சந்தியாவின் திருமணம் நின்று போனது பெரும் கவலையை அளித்தது. பின்பு அங்கிருந்த உறவினர்களிடம் பேசி ஏழுமலை என்ற நபருடன் திருமணத்தை நட்த்தி வைத்தனர்.

அதிமுக – திமுக கொடி பிரச்சனையில்  ஒரு கல்யாணமே நின்று போனது சமூகவலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Marriage stopped for the issue dmk admk flag

Next Story
3 நாளில் வெறும் 300 மீட்டர் மட்டுமே நகர்ந்த 300 டன் விஷ்ணு சிலை…vishnu statue, விஷ்ணு சிலை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express