செவ்வாய் கிரகத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ அண்ணாதுரை பேட்டி

திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
mayiladuthurai

செவ்வாய் கிரகத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ அண்ணாதுரை பேட்டி

சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்து மனிதர்கள் வாழத் தகுதியான கிரகமாக செவ்வாய்க் கிரகம் இருக்க வாய்ப்புள்ளதால், சர்வதேச விண்வெளி மையத்தை அங்கு அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று குறிப்பிட்டார்.

கல்வி குறித்துப் பேசிய அவர், "கல்வியை தாய்மொழியில்தான் சிறப்பாக கற்க முடியும். அதேவேளையில், ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் உலக அளவில் நாம் செல்ல முடியும்," என்று வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை பட்டதாரிகளாக நாட்டுக்கு மட்டுமின்றி உலகத்திற்கானவர்களாகக் கல்வி மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். உலக அளவில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகளைக் கல்வியின் மூலம் அடைய முடியும் என்பதை, தன்னையே உதாரணமாகக் கொண்டு மாணவர்களுக்கு எடுத்துரைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய அவர், பழைய காலத்திலும் அறிவியல் இருந்தது, இன்றும் உள்ளது; ஆனால் அறிவியல் இன்று பல வகைகளில் மேம்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) விண்வெளித் துறையில் முக்கியமானது என்றும், அது ஏற்கெனவே இத்துறையில் செயல்படுத்தப்பட்டு அடுத்த பரிமாணத்தை நோக்கிச் சென்று உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: