மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு; மதுரையில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் 2 இடங்களைப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் 2 இடங்களைப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

author-image
WebDesk
New Update
Su Venkatesan Sachithanantham

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு. வெங்கடேசன் - சச்சிதானந்தம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் 2 இடங்களைப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ. (எம்), ம.தி.முக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி கூட்டணியைத் தொடர்கின்றன.

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த மக்களவைத் தேர்தலில், மதுரை, திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி,மதுரையில் தற்போதைய சிட்டிங் எம்.பி சு. வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cpm

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: