நாகர்கோவிலில் பார்வதி புரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “அரசியலுக்காக மதத்தை பாஜக பயன்படுத்துகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வாருங்கள், வாருங்கள் என பாஜகவினர் தெரு , தெருவாக வீடு, வீடாக அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டு இருப்பதை காண முடிகிறது.
இந்தியாவின் முதல் குடி மகளான இந்திய ஜனாதிபதிக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு இல்லை? ஏன் என கேட்டால். அவர் ஒரு கைம்பெண்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற அவர்களின் பார்வை வெளிப்படுத்தும் எண்ணமா.? மோடி கட்டிய மனைவியை விட்டு விட்டு தனியாக இருப்பவர். அவரே ராமர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என கருத்து சேர்ந்தே ஒலிப்பதை இந்தியாவில் கேட்க முடிகிறது.
கோவிலுக்கு சிறு குழந்தைகள் முதல் சிறுவர்கள்,பெரியவர்கள் எவரும் செல்லாம் அது அவர்களின் நம்பிக்கை அடிப்படையிலான உணர்வு. அரசியலில் ஆன்மீகத்தை கலக்கக்கூடாது. அரசியல்வேறு, ஆன்மீகம் வேறு.
நம்முடைய தமிழிசை சொல்கிறார், இந்திய ஜனாதிபதியை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்காததை அரசியல் ஆக்கக் கூடாது என்கிறார்.
புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை, தமிழக அரசியலில் ஏன் எப்போதும் மூக்கை நுழைகிறார். தூத்துகுடியில் வந்த பெரும் வெள்ளத்தை விட இவரது கண்ணீர் துளியே அதிகமாக இருக்கிறது.
அரசியலில் மதத்தை கலக்காதீர்கள் என மோடியிடம் தமிழிசை சொல்ல வேண்டும். தெலங்கானாவில் நியாயவிலை கடைகளில் பொருள்கள் விநியோகத்தை தடை செய்ய வேண்டும் என தமிழிசை விரும்பினார். அங்கு இவரது முயற்சியை செயல் படுத்த முடியவில்லை.
புதுவையில் இவர் செயல்படுத்த முயன்றபோது புதுவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் புதுவை அரசு அதனை செயல் படுத்தி விட்டது.
நியாய விலை கடைகளில் கொடுக்கும் அரிசி,கோதுமை, சர்க்கரை இவற்றிற்கு பதில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ரூ.1000.00,ரூ.500.00என கொடுக்க முடிவெடுத்த புதுவை அரசு அதனை 10 மாதங்கள் செயல் படுத்தாத நிலையில், மக்கள் போராட்டம் நடத்திய பின் மூன்று மாதங்கள் கொடுத்தார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்திற்கான தொகை மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் அவர்கள் ராமருக்கு கோயில் காட்டியுள்ளோம் என்கிறார்.
இந்த மாநாட்டில் இதுவா முக்கியம். குமரி மாவட்டத்தில் விளை நிலங்களை, வீட்டு மனைகளாக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இரணியல், இடலாக்குடி பத்திர பதிவு அலுவலகங்களில் பல லட்சம் லஞ்ச பணம் கைப்பற்ற பட்டுள்ளது. நேர்மையற்ற பத்திர பதிவாளர்களின் செயல் பற்றி பல புகார்கள் தொடர்ந்து வெளி வருகிறது.
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து,தவறு செய்யும் பத்திரப் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி வழியாக அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதல் கனிமங்கள் எடுத்து செல்வதால் சாலைகள் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கனகராஜ் கூறினார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.