மாஸ்டர் ரிலீஸ் தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக தொடர்ந்து பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

Master Release Actor Vijay met Chief Minister Edappadi Palanisamy regarding his new movie release

Master Release : சென்னையில் இன்று நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக முதல்வரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் , கொரோனா நோய் பரவலை தடுக்க, திரையரங்குகளில் 50% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றியை அடையுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு 100% இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master release actor vijay met chief minister edappadi palanisamy regarding his new movie release

Next Story
புத்தாண்டு விடுமுறைக்கு புதிய டார்கெட் : டாஸ்மாக் போடும் பலே திட்டம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com