Master Release : சென்னையில் இன்று நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக முதல்வரிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் , கொரோனா நோய் பரவலை தடுக்க, திரையரங்குகளில் 50% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் மாஸ்டர் திரைப்படம் வணிக ரீதியில் வெற்றியை அடையுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.