scorecardresearch

வேலூர், கரூர் பரமத்தி, திருத்தணி… தமிழகத்தில் இன்று வெப்பம் தகித்த ஏரியாக்கள் இவைதான்!

கரூர் பரமத்தியில் அதிகப்பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.

Maximum temperature recorded at Karur Paramathi
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், மோக்கா புயல் காரணமாக பரவலான இடங்களில் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் வானிலை காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. குறிப்பாக சென்னையிலும் பயங்கரமான சூடு காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் வெப்ப நிலை பதிவு
தமிழ்நாட்டில் வெப்ப நிலை பதிவு

இந்த நிலையில் இன்று கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி வெயில் காணப்பட்டது. தொடர்ந்து, அதிராமப்பட்டினம் (34.5), சென்னை நுங்கம்பாக்கம் (36.1), சென்னை மீனம்பாக்கம் (38.4), கோயம்புத்தூர் (36.5), வேலூர் (41.8), தூத்துக்குடி (34.1), திருத்தணி (39.6), கன்னியாகுமரி (33.2), காரைக்கால் (37.2), தர்மபுரி (37.6), மதுரை (39.0) என வெயில் காணப்பட்டது.
எனினும் குன்னூர் (26), உதகமண்டலம் (21.1), கொடைக்கானல் (21.6) என வெயில் காணப்பட்டது.

வெயிலின் தாக்கம் எப்போது குறையும்?

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், “கடந்த நாள்களில் மழை பெய்ததால் வெளிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
அதேபோல் அடுத்த சில நாள்களில் காற்று வீசக்கூடும். அப்போது வெயிலின் தாக்கம் குறையக் கூடும் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Maximum temperature recorded at karur paramathi

Best of Express