/indian-express-tamil/media/media_files/2025/07/19/mayiladuthurai-dsp-press-meet-after-suspended-tamil-news-2025-07-19-16-07-54.jpg)
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.சுந்தரேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தவர் சுந்தரேசன். இவர் அலுவலகத்துக்கு நடந்து செல்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. அவரது அலுவலக வாகனத்தை மாவட்ட எஸ்.பி, வி.ஐ.பி. பாதுகாப்பு பணிக்கு மாற்றிவிட்டு பழுதடைந்த வாகனத்தை அவருக்கு கொடுத்ததாகவும் அந்த வாகனம் தனக்கு தேவையில்லை என்று ஒப்படைத்துவிட்டு பணிகளை கவனிக்க வீட்டில் இருந்து நடந்து வந்ததாகவும் வீடியோ வைரலாகியது.
இதற்கு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதை மறுத்த டி.எஸ்.பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார். இதையடுத்து, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் இன்று மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் டி.எஸ்.பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐ.ஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.சுந்தரேசன், தனது உயிருக்கு ஆபத்துள்ளது, தான் மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற போலீஸாரை போல் தவறாக தற்கொலை முடிவை எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை டிரான்ஸ்பர் செய்தார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். இதுதான் காவலர்களின் நிலை. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. ஒன்பது மாதமாக எனது ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன்.
போலீஸ் உயர் அதிகாரிகள் நேர்மையான அதிகாரிகளை வேலை செய்ய விட மாட்டார்கள். குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டி.ஐ.ஜி சஸ்பென்ட் செய்வதற்கு பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.
மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா, நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். சஸ்பெண்ட் செய்திகளை பார்த்து சென்னையில் இருக்கும் எனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மெசேஜ் மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும். இது தொடர்பான பிரச்சனை டிஐஜிக்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை.
ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. ஒன்பது மாதமாக எனது ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன். போலீஸ் உயர் அதிகாரிகள் நேர்மையான அதிகாரிகளை வேலை செய்ய விட மாட்டார்கள். குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென்ட் செய்வதற்கு பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.
மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா, நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். சஸ்பெண்ட் செய்திகளை பார்த்து சென்னையில் இருக்கும் எனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மெசேஜ் மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும். இது தொடர்பான பிரச்சனை டிஐஜிக்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை.
11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. நாமக்கல்லில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒருவன். அடுத்து விஜயகுமார் ஐபிஎஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் தங்கம். தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை ஏன் எனவும் தெரியவில்லை.
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்பதும் தெரியும். என் மீது சாணியை வாரி அடிக்கிறார்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம்.
எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தி விட்டு சென்று விடுவீர்கள். நான் கடைசிவரை பிரச்னைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன். டி.ஜி.பி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை என்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்னையில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நேரடியாக தலையிட வேண்டும்" என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.சுந்தரேசன் கூறியுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.