மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் : 2 குருக்கள் நீக்கம்

மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் 2 குருக்களை நீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் நடவடிக்கை எடுத்தது.

மாயூரநாதர் கோவில் அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் 2 குருக்களை நீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் நடவடிக்கை எடுத்தது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நிர்வாகம் செய்து வருகிறார்கள். தினசரி பூஜை புனஸ்காரங்கள் தவறாமல் நடைபெறும் கோவில் இது!

மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. அம்மனுக்கு பூஜை தருணங்களில் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

மாயூரநாதர் கோவிலை நிர்வாகிக்கு திருவாவடுதுறை ஆதீனம் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ஆதீனம் விசாரித்தபோது, ராஜ், கல்யாணம் ஆகிய இரு குருக்களும்தான் சுடிதார் அலங்காரத்திற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. அதையொட்டி மேற்படி இரு குருக்களையும் உடனடியாக வேலையை விட்டு நீக்கி ஆதீனம் சார்பில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

ஆகம விதிகளுக்கு விரோதமாக இந்த சுடிதார் அலங்காரம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

×Close
×Close