மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகங்களை வழங்கி அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து ரூ.655.44 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது;
பிரதமர் மோடி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். அவரை வரவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழகத்திற்கு செய்ய வேண்டியதை செய்யாமல் வருவது எந்த விதத்தில் நியாயம்.
புது மாவட்டங்களை அறிவிப்பது பெரியது அல்ல. அந்த மாவட்டங்களுக்கான தேவையான உட்கட்டமைப்புகளை அமைத்து தருவதுதான் பெரியது. பல்வேறு புதிய மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/cfd91499-f0b.jpg)
மயிலாடுதுறை நகராட்சிக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும்.சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உப்பு நீர் புகுவதை தடுக்கும் வகையில் கடைமடை நீர் ஒடுங்கிகள் அமைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.30 கோடி செலவில் வானகிரி மீன்பிடி தளம் மேம்படுத்தப்படும்.நாகை மாவட்டம் சிறுதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் கரை பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து செந்தூா் ரயிலில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு சீா்காழி ரயில் நிலையம் வந்தாா். சீா்காழி வந்த முதல்வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“