scorecardresearch

மக்களை தேடி மேயர்.. பள்ளிகளில் மாலை ஸ்நாக்ஸ்.. பிரியா அதிரடி

மக்களை தேடி மேயர் மற்றும் பள்ளிகளில் மாலை ஸ்நாக்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

Mayor Priya presented the Chennai Corporation Budget
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாநகராட்சி பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் மாலை ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தார்.

தொடர்ந்து மாதம் ஒருமுறை வட்டார அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும் முதியவரின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யப்படும் என்றார்.

இதையடுத்து சென்னை தெருக்களில் பார்க்கிங் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து மாநகராட்சியின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அறிவித்தார்.

முன்னதாக சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக மேயர் பிரியா ஏதேனும் அறிவிப்புகள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இதுதொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mayor priya presented the chennai corporation budget