தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு மேற்கொண்டார் சென்னை மேயர் பிரியா.
Advertisment
கடந்த ஜூன் 19 ஆம் தேதி, இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் டாட் கோராடோ கிளினியை சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து கலந்துரையாடினார்.
இந்த பயணத்தை, சென்னை துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத் துறை கூடுதல் ஆணையாளர் சங்கர்லால் குமாவத் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை மேயர் பிரியாவுடன் மேற்கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஆலோசனைகள் பெற்றுக்கொண்ட குழு, இன்று காலை சென்னை திரும்பினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு முறையை கையாளுகிறார்கள். இத்தாலியில் பிளாஸ்டிகை கையால தனி பிளாண்ட் அமைக்கின்றனர். சென்னை மாநகராட்சியில் பிளாஸ்டிக் சவாலாக உள்ள நிலையில் முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசித்து இத்தாலியில் பயன்படுத்தும் முறையை இங்கு செயல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil