மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
இதேபோன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், துணைத் தலைவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 5,000 மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“