நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்பட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், சி.பி.ஐ கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இந்நிலையில் இன்று (பிப்.5) தி.மு.க உடன் சி.பி.எம் மற்றும் ம.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மற்றும் ம.தி.மு.க இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தம.தி.மு.க தேர்தல் குழு, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். 2 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை தி.மு.கவிடம் கேட்டுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து வந்தபிறகு முடிவு தெரிவிக்கப்படும். ஆனால் எந்த தொகுதியில் போட்டியிருகிறோம் என்று முடிவாகவில்லை. விரைவில் அதுகுறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினர்.
கடந்த முறை தேர்தலில் ம.தி.முகவிற்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“