திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த 6 தொகுதிகளிலும் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
1.மதுராந்தகம் (தனி) – மல்லை சத்யா
2.சாத்தூர் – ரகுராமன்
3.வாசுதேவநல்லூர் – சதன் திருமலைக்குமார்
4.பல்லடம் – முத்துரத்தினம்
5.அரியலூர் – சின்னப்பா
6.மதுரை தெற்கு – பூமிநாதன்
ஆகியோர் மதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை என்று அறிவித்துள்ளது. ஐ.யூ.எம்.எல் கட்சி வேட்பாளர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்று ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
1.கடையநல்லூர் – முகமது அபுபக்கர்,
2.வாணியம்பாடி – முகமது நயீம்
3.சிதம்பரம் – அப்துல் ரகுமான்
ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாமாகவின் 3வது கட்ட வேட்பாளர்கள்:
மேட்டூர் – சதாசிவம்
பூந்தமல்லி (தனி) – ராஜமன்னார்
சங்கராபுரம் – ராஜா<br>வந்தவாசி (தனி) – முரளி சங்கர்</p>
பாமக சார்பில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.