க.சண்முகவடிவேல்
Mdmk | Vck | Dmk | Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் ம.தி.மு.க இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
திருச்சியில் தனி சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க அறிவித்திருந்த நிலையில், தங்களுக்கு பம்பரம் சின்னம் வழங்கவேண்டும் என அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையர் பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தை ம.தி.மு.க தலைமை நாடியது. நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதன் பின்னரும் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் முன்வராததால் ம.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்தனர். பா.ஜ.க-வின் அழுத்தமே தங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதுக்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி தினம் என்பதால், இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் வேட்பாளர் இறுதி செய்வது, சின்னங்கள் பொறுத்தும் பணிகள் தொடங்குவது என மும்முரம் ஆகியிருக்கின்றது. இந்த சூழலில், ம.தி.மு.க கட்சிக்கு அவர்கள் 2-ம் பட்சமாக கேட்ட தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்குவதாக இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட் வேட்பாளர்களுக்கு 'பானை' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. வி.சி.க சார்பில் அதன் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். வி.சி.க சார்பில் விழுப்புரம் மக்களவை தொகுதியில் சிட்டிங் எம்.பி ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“