scorecardresearch

ஒரே தேர்தல் வாய்ப்பு இல்லை, தமிழகத்தில் இந்துத்துவா கருத்துகளை திணிக்க முயற்சி- வைகோ

தமிழகத்துக்கான திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சிக்கிறார். இதுவரை 14 மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என வைகோ குற்றஞ்சாட்டினார்.

MDMK MP Vaiko alleged to impose Hindutva ideas in Tamil Nadu
திருச்சி விமான நிலையத்தில் வைகோ எம்.பி., செய்தியாளர்கள் சந்திப்பு

பட்டுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (அக்.8) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக ஆளுநர் திருக்குறள் பற்றி பேசியது குறித்து கேட்டதற்கு; திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது.
இந்துத்துவா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங் பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றன. அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என். ரவியும் திருக்குறளை பற்றி தவறாக பேசுகிறார்.

திருக்குறளை பற்றி ஆல்பார்ட் ஸ்விட்சர்ரை விட வேறு யாரும் ஆராய்ச்சி செய்து விட முடியாது. பௌத்த மதத்தில் கூட இது போன்ற கருத்துக்களை சொல்லக்கூடிய நூல்கள் இல்லை.
அது மட்டும் இல்லாமல் உலகில் இப்படி ஒரு பொதுவான நூல் இல்லை என்று. நோபல் பரிசு பெற்ற அவரே திருக்குறள் குறித்து கூறியிருக்கிறார்” என்றார்.

தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்குகிறாரா என்ற கேள்விக்கு,
தமிழகத்துக்கான திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சிக்கிறார். இதுவரை 14 மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் என பதிலளித்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் என்ற பேச்சு அடிபடுகிறதே என்ற கேள்விக்கு, மனம் போன போக்கில் பாஜக பேசிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மகளிர் அணி ரொக்கையா, புலவர் தியாகராஜன், மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துகுமார், கே.கே.நகர் வினோத், ஆசிரியர் முருகன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mdmk mp vaiko alleged to impose hindutva ideas in tamil nadu