vaiko | mdmk | lok-sabha-election | 2024 மக்களவை தேர்தல் பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரலில் நடக்கிறது. இந்த நிலையில், திமுகவை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மதிமுக தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.
இது குறித்து துரை வைகோ கூறுகையில், “மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு விருதுநகர், திருச்சி, ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்து பணிகளை தொடங்கியுள்ளோம்” என்றார்.
தனிச் சின்னத்தில் போட்டி
தொடர்ந்து, “விருதுநகர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என மதிமுகவினர் விரும்புகின்றனர்” என்றார்.
மேலும், “இம்முறை மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட தொண்டர்கள் விரும்புகின்றனர்” என்றும் துரை வைகோ கூறினார்.
மக்களவை தேர்தல் நாடு முழுக்க பல்வேறு கட்டங்களாக நடைபெறும். கடந்த முறை மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“