Medall Lab gives positive report to 4,000 negative cases : கொரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளை செய்ய மெடெல் ஆய்வகத்திற்கு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கொரோனா பாசிடிவ் முடிவுகளை தமிழகத்தின் கணக்கில் இணைத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகளில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையில் அலட்சிய மனப்பான்மையுடன் இந்த ஆய்வகம் செயல்பட்டதாக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட நேர்மறை முடிவுகளை கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளாக அறிவித்தது. மே 19 மற்றும் 20 தேதிகளுக்கு இடையே மேலும் 4000க்கும் மேற்பட்ட நெகடிவ் முடிவுகளை பாஸிட்டாவாக பதிவு செய்து ஐ.சி.எம்.ஆரின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றியுள்ளது என்று அந்த ஆய்வகத்திற்கு அளிக்கப்பட்ட இரண்டு பக்க அறிக்கையில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ். செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த வழக்குகள் எதுவும் மாநில பதிவேட்டில் மற்றும் ஊடக புல்லட்டின்களில் சேர்க்கப்படவில்லை. மேலும் போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக முழுமையான விபரங்களும் அதில் இடம் பெறவில்லை. இது பாசிடிவ் நோயாளிகளை அடையாளம் காணுவதை மேலும் தாமதமாக்கியது.
தவறான அறிக்கைகள் காரணமாக தேவையான உதவிகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் நிலவியது. மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்குத் தடையாக இருந்தது என செல்வநாயகம் கூறினார். ஆய்வகத்திற்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று அரசாங்கம் சந்தேகப்படுகிறது. ஏன் என்றால் இதன் மூலம் நிறைய நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருவார்கள். அதன் மூலம் அதிக கட்டணத்தை மருத்துவமனைகள் பெறும் என்று அவர் கூறினார். ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் மூன்று நாட்களுக்குள் தங்களின் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“SARS Cov-2 க்கான RT-PCR மாதிரிகளை பரிசோதிப்பதற்கான அந்த ஆய்வகத்திற்கான அனுமதி பொது சுகாதாரக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். ஐ.சி.எம்.ஆர். தரவுதளத்தில் தவறான தரவுகளை பதிவேற்றம் செய்தது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தை முழுமையாகவும் சரியாகவும் திருத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம்.சோதனையை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுடன் உருவாக்கப்பட்ட மற்றும் பகிரப்பட்ட அறிக்கை துல்லியமானது என்பதை தெளிவுபடுத்தி பதிவு செய்ய வேண்டும் என்று ஆய்வகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil