'அடுத்த 6 மாதத்தில் மீடியா முழுவதும் பிஜேபி கண்ட்ரோலுக்கு வந்துவிடும்' - அண்ணாமலை சர்ச்சை பேச்சு
Tamil Nadu BJP president Annamalai’s controversial speech on media Tamil News: தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, மாநிலத்தில் உள்ள ஊடகங்கள் “ஆறு மாதங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Tamil Nadu BJP president Annamalai’s controversial speech on media Tamil News: தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, மாநிலத்தில் உள்ள ஊடகங்கள் “ஆறு மாதங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
Annamalai bjp Tamil News: பாஜக மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலை, இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில்(16-ம் தேதி) பொறுப்பேற்கிறார். முன்னதாக, கோயம்புத்தூரிலிருந்து 3 நாள் சாலை வழி பயணமாக சென்னை புறப்பட்டுள்ள அண்ணாமலை அங்கங்கே தொண்டர்களை சந்தித்து உரையாற்றி வருகிறார்.
Advertisment
இந்நிலையில், நேற்று நமக்கலில் அவர் பேசுகையில், ஊடகங்களைப் பற்றி மறந்து விடுங்கள். அவர்கள் நம்மை பற்றிய 'தவறான செய்திகளை' போடுவது போன்ற விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அடுத்த ஆறு மாதங்களுக்குள், ஊடகங்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம், கையில் எடுக்கலாம், அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம். காரணம் என்னவென்றால் எந்தவொரு ஊடகமும் தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவிக்க முடியாது.
இத்தனைக்கும், பாஜகவின் முன்னாள் தலைவர் எல். முருகன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக உள்ளார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழ் வருகின்றன. தொடர்ந்து ‘தவறுகள்’ இருக்க முடியாது. ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட முடியாது. இதுபோன்ற செய்திகளை அவர்களது அரசியலுக்குப் பயன்படுத்த முடியாது.” என அண்ணாமலை கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
அடுத்த 6 மாதத்தில் மீடியா முழுவதும் பிஜேபி கண்ட்ரோலுக்கு வந்துவிடும் - அண்ணாமலை... pic.twitter.com/nOyKhv1aQr
— HINDI Theriyathu 👊💥 PODA❗ (@Poda_Beeda) July 15, 2021
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், 'ஊடகங்கள் சுயாதீனமாக செயல்பட வேண்டும், அதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் இதைப் பார்க்கிறேன் <அண்ணாமலையின் கருத்துக்கள்> ஊடகங்களை ஒரு தரப்பினருக்கு சாதகமாக வற்புறுத்துவதற்கான ஒரு வழியாகும், அதே சமயம் கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது, ”என்று கூறியுள்ளார்.