மருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி

69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி

69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைக்கு எதிராக எதிராக கடந்த 2012 முதல் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என கடந்த 1992-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50% சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சில மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்த வழக்கை 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட பிரதான வழக்குடன் இணைக்கலாமே என நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் “பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோருவதை ஏற்க முடியாது. ஒரு கல்லூரியில் 100 இடங்கள் தான் இருக்கிறது என்றால் நாங்கள் எப்படி கூடுதல் இடம் ஒதுக்க கூற முடியும்?” என கூறி மேற்கண்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Medical admission 69 allotment case dismissed

Next Story
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: விடுதி காப்பாளர் புனிதா சரண்புனிதா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X