கோவையில் உள்ள தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத நல்லிணக்க மனிதநேய மருத்துவ முகாம் என்ற நோக்கத்தில் எல்.சி. மருத்துவமனை மற்றும் மருத்துவ அறக்கட்டளை ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் ஒருங்கிணைத்த இலவச எண்டோஸ்கோபி மற்றும் வயிறு மகளிர் நல தொடர்பான இலவச மருத்துவ முகாம் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இதில் எல்.சி. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் வித்யா ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார் கௌரவ அழைப்பாளராக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி எல் சி மருத்துவமனை மற்றும் அறக்கட்டளையின் தலைவர் ராஜன், இஸ்காப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் பஷீர்,மாவட்ட தலைவர் காந்தி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து இதே போல தமிழகம் முழுவதும் இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாமை நடத்த போவதாக நிகழ்ச்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை