திருமண பதிவுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்! அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மணமக்களின் ஆரோக்கியத்தை பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும்.

By: Updated: February 27, 2018, 12:59:30 PM

திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று அவசியம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2009ம் ஆண்டு திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, திருமண பதிவுச் சட்டம் இருந்த போதும், பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கூறப்படவில்லை. அதனால், அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். என அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.மணமக்களின் ஆரோக்கியத்தை பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும்

இதையடுத்து, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Medical certificate for marriage registration is mandatory hc notice to the government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X