தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வரவேற்பு விழாவிற்கு வருகைதந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
"இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு கிடைத்த பாக்கியம். தமிழக முதல்வர் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு முடிவடைந்த நிலையில், மருத்துவத் துறையில் பல்வேறு மேம்பாடு நடக்க செயல்பட்டிருக்கிறார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழக அரசு, இந்த ஆண்டு மட்டும் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு 459, பல் மருத்துவம் 106 என மொத்தம் 565 மாணவர்களை மருத்துவ துறையில் படிப்பதற்கு தேர்வு செய்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் மற்றும் தனியார் இடம் உட்பட, மொத்தமாக 71 மருத்துவக் கல்லூரி உள்ளன.
திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
அங்கேயும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழும்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil