scorecardresearch

மெடிக்கல் ஸ்டோர் வைத்தியத்தால் வந்த வினை: எல்.கே.ஜி மாணவி பரிதாப மரணம்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த பெண் குழந்தைக்கு அளிக்கப்பட்ட மெடிக்கல் ஸ்டோர் வைத்தியத்தால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

child death
காஞ்சிபுரம் அருகே பள்ளி குழந்தைகள் இருவர் ஏரியில் மூழ்கி மரணம்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4). இவர் ரிச்சட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

குழந்தை துர்காஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சளி இருமல் அதிகமாக இருந்ததாகவும், கூறி கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மெடிக்கலில் சளிக்காக ஆவி பிடித்துள்ளார். மேலும், அங்கிருந்து சொந்தமாக மருந்து மாத்திரைகளும் வாங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (02.01.2023) நள்ளிரவில் பள்ளி சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பள்ளி சிறுமியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொப்பம்பட்டி கிராமத்தில் அரசு பெண் மருத்துவர் கிளினிக் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். மெடிக்கல் கிளினிக் ஒரு நர்ஸ் ஒரு உதவியாளரை கொண்டு நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் டாக்டர் இல்லாதபோது நர்ஸ் மருத்துவம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Medical store treatment leads to 4 years old girl death in tiruchi district