Meenakshi Amman Sundareshwarar thirukalyanam live Streaming : உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம், இன்று நடைபெறுகிறது.
Advertisment
வருடா வருடம் தமிழகத்தில் நடைபெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று தான் மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால், இந்த திருவிழா நடைபெறுமா, நடைபெறாதா என்ற எண்ணம் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தோன்றியது.
இந்நிலையில், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெறும் என்றும் ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ( மே 4) காலை 09:00 மணியில் இருந்து 09:30 மணி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த திருக்கல்யாணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கோவிலுக்குள் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. சிவாச்சாரியார்கள் மட்டுமே திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்று திருக்கல்யாணத்தை நடத்தினார்கள்.
இந்த நிகழ்வினை நேரலையில் பார்க்க விரும்பும் நபர்களுக்கு கோவில் நிர்வாகம் யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பக்தர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள யுடியூப் பக்கத்திற்கு சென்று மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கண்டு ரசித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”