மதுரை கோச்சடையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜர் செட்டியார் - ராதா தம்பதியினரின் மகன் கருமுத்து கண்ணன். 70 வயதான இவர், மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளர் ஆவார்.
மேலும், தியாகராஜர் கலைக்கல்லூரி தலைவராகவும், கப்பலூரில் உள்ள தியாகராஜர் நூற்பாலை இயக்குநராகவும் இருந்தார். எனினும் கடந்த 17 ஆண்டுகளாக தக்கார் பதவியை வகித்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் அன்பை பெற்றிருந்ததால் தொடர்ந்து கோவில் தக்கார் பதவியில் நீடித்தார். இந்த நிலையில் இன்று இவர் காலமானார்.
கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயக்குமார் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (மே 23) கோச்சடையிலுள்ள அவரது வீட்டில் அவரது உடலுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருமுத்து கண்ணனுக்கு ஒரு மகன் ஹரி தியாகராஜன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“