திருச்சியில் தமிழ்நாடு அளவில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் மூத்த விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான
பிஆர் பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார்.
கூட்டத்தில் ராஜாராமன் பேசுகிறபோது:
50 ஆண்டு காலமாக மேகதாட்டு அணை கட்ட கர்நாடக எடுத்த முயற்சிகளை விவசாயிகள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சட்டவிரோதமாக மெகதாட்டு அணையை கட்டி தமிழ்நாட்டை அழிப்பதற்கு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு விவசாயிகளுக்கு உள்ளது.
விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த கோரி அனைத்து விவசாயிகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவசர கடிதம் அனுப்ப வேண்டும். அதற்கான முதல் கடிதத்தை இன்று அனுப்பி வைக்கிறோம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில 22 லட்சம் ஏக்கர் சாகுபடி பெறுகிறது.
மேலும், சென்னை உட்பட 12 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் சட்ட விரோதமாக மத்திய அரசு பிரதிநிதிகள் மேகதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சட்டவிரோதமாக செயல்படும் கர்நாடக அரசுக்கு துணை போகும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் வரும் மே 2ல் தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் பலஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தமிழகம் முழுமையிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளனர். தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்த 15 பேர் கொண்ட காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட போராட்டத்தை தஞ்சாவூரில் அறிவிப்போம். தொடர்ந்து போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்.
மேலும் காவிரி பாசனத்தை ஒழுங்குபடுத்த 11 தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் பி.ஆர். பாண்டியன் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்.தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் பி அய்யாக்கண்ணு. மகாதானபுரம்
ராஜாராமன்,ஸ்ரீரங்கம் பாலு தீட்சதர், திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சேலம் தங்கராஜ்.தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நாமக்கல் பாலு, முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகங்கைஆதிமூலம் நாகை எஸ். ஸ்ரீதர், தஞ்சாவூர் மாவட்ட விவசாய நல சங்க தலைவர் சின்னத்துரை, தெற்கு ராஜன் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் சீர்காழி சீனிவாசன், வீராணம் ஏரி பாசன விவசாய சங்க பொறுப்பாளர் மணிக்கொள்ளை ராமச்சந்திரன், கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்
உட்பட 15 பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுகௌரவ தலைவரும் திருமங்கலம் கால்வாய் பாசன சங்க தலைவருமான எம். ராமர்,தமிழ்நாடு காவிரி விவசாயி சங்கத்தின் தலைவர் பழனியப்பன்,மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் என் செந்தில்குமார், தெற்கு மாவட்ட தலைவர் வி எஸ் வீரப்பன்,திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், மாநில இளைஞரணி தலைவர் மேலூர் அருண்.செயலாளர் மகேஸ்வரன்,வயலூர் ராஜேந்திரன்,எம் தெய்வமணி குடவாசல் நாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.