/tamil-ie/media/media_files/uploads/2023/07/New-Project53.jpg)
Coimbatore BJP
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக எதிர்க் கட்சி தலைவர்கள் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களுரூரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்ர் பேசாதத்திற்கு கண்டனங்களை தெரிவித்து கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநகர மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் அமைதியாக உள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற
கூட்டத்தில் இதை பற்றி பேசாதத்திற்கு கடுமையான கண்டனங்களை பாஜக விவசாய அணி தெரிவிக்கிறது. கர்நாடக அரசுடன் நட்பு பாராட்டி பேசி கொண்டிருக்கிறார். தமிழகத்தை வஞ்சி கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.
தமிழகத்திற்கு திரும்பி வரும் போது தண்ணீருக்கான உரிமை பெற்று வருவார் என காத்திருக்கிறோம், ஆனால் அங்கு சமூக நீதிக்காக பேசுவார், தமிழக மக்களுக்காக பேச மாட்டார் என தெரிகிறது. காவிரி தண்ணீரை பற்றி பேசாதது உண்மையான முதலமைச்சரின் சுய ரூபம் பற்றி தெரிகிறது. ஆனைமலை, நல்லாறு, முல்லை பெரியாறு, காவிரி தொடர்பான பிரச்சனைகள் பாஜக மாநில தலைவர் நடைபயணத்தில் எதிரொலிக்கும். தமிழக முதலமைச்சர் கட்சி, குடும்ப நலனுக்காக கூட்டணியில் உள்ளவர்களை பேசுவதில்லை,
கர்நாடகா அரசு காவிரியில் ணை கட்டுவதற்கான முயற்சியை கைவிட வேண்டும். கைவிட்டால் தான் நான் கர்நாடகா வருவேன் என தமிழக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தால், அதற்கான அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டிருக்கும். ஆனால் சுயநலத்திற்காக தமிழக முதல்வர் இதனை செய்யவில்லை" என விமர்சனம் செய்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.