பன்வாரிலால் புரோஹித் நரேந்திர மோடி சந்திப்பு : தமிழக அரசின் அனுமதியை பெறமாலும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும் மீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட உள்ளது. இதன் வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவிரி அணையின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலுடன் பிரதமருக்கு மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணமானார்.
மேலும் படிக்க : பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம்
பன்வாரிலால் புரோஹித் நரேந்திர மோடி சந்திப்பு
நேற்று மாலை 05.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்பு மேகதாது அணை குறித்து பிரதமரிடம் விளக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிரதமரை சந்தித்த பின்பு உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து விரிவான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பன்வாரிலால் புரோஹித் நரேந்திர மோடி சந்திப்பு
ஆளுநர் சென்னை திரும்பிய ஒரு சில நாட்களில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 26 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தன்னுடைய முடிவினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.