மேகதாது அணைக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட இருப்பதாக கர்நாடக அரசு கூறி வந்தது. குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக கட்டப்படுகிறது என்று கூறி வந்தது. இந்த நிலையில் தடுப்பணைகளின் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நவம்பர் 29 அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
Advertisment
இதில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
பின்னர், இன்று திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று திருச்சியில் கண்டன ஆர்பாட்டம் தொடங்கியது. அதில் கீ. வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி உழவர் சந்தைத் திடலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
‘காவிரியின் குறுக்கே #MekedatuDam கட்ட மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, திருச்சியில் அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்’
திமுக தலைவர் @mkstalin தலைமையில் கி.வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், அப்துல்சமது பங்கேற்பு. pic.twitter.com/TFma9dBJbL
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 4 December 2018
திமுக தலைவர் பேச்சு
தற்போது கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். திருச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் லைவ் அப்டேட்டினை நீங்கள் தற்போது யூட்யூபில் பார்க்கலாம்.