மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (29. 11.180 நடைபெறுகிறது.
mekedatu dam project Dmk All Party Meeting : அனைத்துக் கட்சிக் கூட்டம்!
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் 5000 கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு எதிராக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் நேற்று கண்டன அறிக்கை வெளியிட்டன. அடுத்தகட்டமாக தமிழ்நாட்டில் போராட்டக் களம் அமைக்க திமுக தயாராகியிருக்கிறது. இதன் முதல் படியாக இன்று (நவம்பர் 29) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை பத்தரை மணி அளவில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தை போல் மேகதாது விவகாரத்திலும் தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தும் தேதியை முடிவு செய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேதாது அணை விவகாரத்தில் திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் சுயலாபத்திற்கான நாடகம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்பும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பாதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.